Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
IC:A Facebook Friend
வாசியோகம் என்றால் என்ன?
*********************************
கடவுள் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஒளி என்று பெயர் பஞ்ச பூத சக்திகளின் கூட்டிணைவால் அவ்வொளி நம் உடலுக்குள்பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதத்தில் காற்றே மிக உன்னதமானது. இதனைக் கொண்டே சித்தர்கள் சாகா நிலையை அடைந்தனா் அக்காற்றைப் பிடிக்கும் கலையைப் புண்ணிய ஆத்மாக்களுக்குப் பயன்படும் விதம் தம் செய்யுளில் பாpபாசையாகச் சொல்லி வைத்துள்ளனர். ஸ்ரீகாகபுசுண்டர் தொடங்கி வள்ளலார் வரையிலும் வாசியைப் பாடாத சித்தர்கள் இல்லை எனலாம்.
வாசி என்றால் என்ன?
************************
பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியே உள்சென்று சக்தியைக்கொடுக்கிறது. வாசி என்பது மூலாதாரத்தில் இருந்து தலையின் உச்சி வரை உள்முகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர்க்காற்று. இது மூக்கின் வழிவரா. சித்தர்கள் தங்கள் உடலைக் காயகல்ப உடலாக மாற்றிக் கொள்வதற்கும் இறப் பில்லாமல் வாழ்வதற்கும் எங்கும் பறந்து செல்வதற்கும் அக்காற்றையே அவர்கள் இலயமாக்கிப் பயன்படுத்திக்கொண்டனர் நம் உடலில் உள்ள தசவாயுக்கள்
1.பிராணன் 6.நாகன்
2.அபாணன் 7.கூஜ்மன்
3.வியாணன் 8.கிருகரன்
4.உதானன் 9.தேவதத்தன்
ஜ5.சமானன் 10.தனஞ்செயன்
என்பனவாகும். இதில் தனஞ்செயன் என்ற வாயு மட்டும் குழந்தையை உந்தித்தள்ளி பிறக்க வைத்துப் பின்பு அது மூலாதாரத்தில் ஒடுங்கியே கிடக்கும். இது மனிதன் இறந்த பின்பு அவ்வுடலை வீங்கவைத்துச் சிதைத்துத் தலைவழியே வெளியேறும். உயிர் உள்ள போதே அக்காற்றைக் கிளப்பி அதனைப்பயன்படுத்திக் கொள்வதே வாசி எனும் யோகம் ஆகும்.
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள்தாத்த நாதா;பாதம் அம்மைபாதம் உண்மையே. (சிவவாக்கியா பா:126)
இங்கே 'உரு' தாப்பதற்குத் தனஞ்செயன் என்ற வாயுவே காரணம் இதுவே பிறப்புறுப்புக்குக் கீழே மூலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் அதனைக் கபாலத்தில் ஏற்றி என்றும் இளமையுடன் வாழலாம் என்கிறா் சிவவாக்கியா மேலும் மூலாதாரத்தில் அக்கினியாய் ஒளிந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை மேலே கிளப்பி அதனையே தியானித்து வந்தால் எல்லா சித்திகளும் பெறலாம்
என்பதை...
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடா
(திருமந்திரம்,3ஆம் தந்திரம்)
என்கிறா் திருமூலா்
வாசியை வசமாக்கும் முறை
*******************************
வாசி என்பது சித்தர்கள் மட்டுமே செய்து வந்த அற்புதக் கலை. அதனைச் சாகாக் கலை, வேகாக்கால் என்று அழுகணிச் சித்தர் குறிப்பிட்டுள்ளா் இந்தக் கலையைத் தீயவா்கள் பயன்படுத்தா வண்ணம் பாபாசையாகத் தம்நூலில் சொல்லி வைத்தனா் அதனை நானும் வெளிப் படையாகச் சொல்ல விரும்பவில்லை ஆகவே சில விளக்கங்களை மட்டுமே கூறியுள்ளேன். காகபுசுண்டா இயற்றிய பெருநூல் காவியம் 1000 என்ற நூலில் வாசியை அழகாக எடுத்து இயம்பியுள்ளா் உணவில் விருப்பம் கொண்டு உண்டு திரிபவனுக்கு வாசி என்பது எட்டாக்கலையாகும். யோக சாதனையில் இருக்கும் யோகிக்கு உணவு கட்டுப்பாடு அவசியமானதாகும்.
தௌ்ளாத மாந்தருக்குத் தவிடுமில்லை தீனி குறையாதவா்க்கு வாசியில்லை
(காகபுசுண்டா்பா: 72 அ-3)
ஆகையால் உணவில் ஒரு கட்டுப்பாடும் திடமான உள்ளமும் கொண்டு விடா முயற்சியுடன் செய்யும் ஒரு பயிற்சி முறைதான் வாசி யோகம்
வாசிப் பழக்கம் அறியவேணுமற்று மண்டல வீடுகள் கட்டவேணும் (கொங்கண நாயனா் பா:28அ-1)
என்று வாசியின் அவசியத்தைக் கொங்கண நாயனா் வலியுறுத்துகிறா் வாசி ஒன்றே மனிதனை நோயிலிருந்து காக்கும் . அதுவே என்றும் இளமை தரும் மாமருந்து வாசியை இலயமாக்கும் மந்திரத்தைத் தௌ்ளத் தெளிவாக என்று சிவவாக்கியா சுட்டிக்காட்டுகிறா் அ இ உ இ இ என்ற மூன்று எழுத்தே மந்திரம் ஆகும். இம்மந்திரத்தைச் சொல்லி வாசி என்னும் குதிரையை ஓட்டிப் பழக வேண்டும். அ இ உ இதுவே சித்தர்கள் சொன்ன எட்டு இரண்டு மந்திரம் தமிழ் எண்முறையில் இதனை அறிந்து கொள்ளலாம். அகரமும் உகரமும் உடலில் சூரிய சக்தியாகவும் சந்திர சக்தியாகவும் செயல்படுகின்றன. இம் மந்திரத்தைப் பயன்படுத்தியே தனஞ்செயன் என்ற வாயுவைக் கிளப்ப வேண்டும்.
எட்டிரண்டு மொன்றுமது வாலை என்பார்
இதுதானே பாதிமதி சுழுமுனை என்பர்.அங்ஙனம் கிளம்பும் வாயுவானது மேலே பாம்பைப் போல் சீறிப்பாய்ந்து உண்ணாக்கைத் தாக்கும். அங்கிருந்தே அது கபாலம் ஏறி ஒளியுடன் சோ்ந்தது. புறவுலகில் அனைவரும் அறியும்வண்ணம் அரச மரத்தடியில் பாம்புச்சிலையை வடித்து வைத்தனா்.(ஓசோன் என்கிற சுத்தக் காற்றை அரசமரமே தரவல்லது). கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உண்புதுமை மெத்த உண்டு
(அழுகணி பா:20அ-1-2)
உண்ணாக்கு வழியே மேல் ஏறும் காற்றே வாசி இப்பொழுது மூக்கின் வழியே சுவாசம் இருக்காது. ஆனால் வாசி மட்டும் இயங்கிக் கொண்டே இருக்கும் நாசி செய்யாதன வற்றை எல்லாம் வாசி ஒன்று மட்டுமே செய்து விடும் .அக்காற்றே உடல் முழுதும் பரவி பரவச நிலையை அடைய வைக்கும் அந்நிலை அடைந்தவரைச் சுற்றியே மென்காந்த அலை பாயும் அதுதான் ஆன்ம சக்தி சித்தர்களின் ஜீவ சமாதியில் நாம் ஏகும்போது அந்நிலையை நாம் உணர முடியும் .இத்தகைய வாசி நமக்குள்ளே அடங்கும் விதத்தைச் சிவவாக்கியா
நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லீரேல்
ஓடி ஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் கோடிகோடி காலமும் குறைவிலாதுஇருப்பீரே (சிவவாக்கியா; பா:275)
என்கிறா் வாசி இலயமாகி நமக்குள் ஒடுங்கிவிட்டால் எம பயமின்றி கோடி கோடி காலம் எந்தக்குறையும் இல்லாது வாழ முடியும்.வாசியைத் தடுக்கும் எமன் ஸ்ரீபோகா் தம்முடைய போகா் 7000 என்ற நூலில் வாசியைக் குறிப்பிடும் பொழுது
ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைத்தள்ளி
அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம் நீக்க
வாட்டியே ஐம்புலனை வாளால் வீசு
மறவாதே இரவுபகல் வாசி வாட்டே (ஸ்ரீபோகா் பா 28 அ-3-4)
என்று வாசி வேலை செய்யும் முறையைக் குறிப்பிடுகிறா் அ உ என்ற இரண்டு மந்திரத்தால் வாயின் உள்ளே இருக்கும் அண்ணாக்கை ஆட்டினால் அங்கிருக்கும் கபநீர் எல்லாம் வெளியேறிவிடும் அதுதான் வாசி மேலே ஏறாவண்ணம் தடுத்துக் கொண்டிருக்கும். அந்தக்கப நீரை வெளியேற்றினால் வாசி கபாலம் ஏறி இலயமாகும். இந்தக் கப நீரையே கோழை என்றும் எமன் என்றும் சொல்லி வைத்தார்கள். இது அதிகமாகும் போது மனிதன் இறப்பை எய்துகிறான் ஆனால் வாசியோகம் இக்கோழையை எடுத்து விடுவதால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம்.அகரத்தையும் உகரத்தையும் ஓதும் முறைகளைப் புசுண்டரும் சிவவாக்கியருமே தம்நூலில் கூறி வெளிப்படுத்தினா் அம்மந்திரம் வேட்டைக்காரன் குணுகுணுத்த மந்திரம் என்று பாபாசையாகச் சொல்லிவைத்தா் வேட்டைக்காரன் பேச்சு எப்படி அமையுமோ அப்படித்தான் இம்மந்திரத்தை உச்சாடனம் செய்யவேண்டும். ஸ்ரீபோகா் இவ்வாசியை வைத்தே மலைமீது தாவினா் என்று ஸ்ரீபுசுண்டா் தம்நூலில் சான்று பகா்கிறார்
பிராணாயாமமும் வாசியும் ஒன்றல்ல
*****************************************
பிராணாயாமம் என்பதனையே பலரும் வாசியென்று நினைத்துக்கொண்டுள்ளனா; அது தவறான எண்ணம் மனிதா்கள் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார்கள் அதனைக் குறைத்துக்கொள்ளவும் காற்றிலுள்ள உயிர்ச்சக்தியின் மூலம் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி ஆயுளைத் தள்ளிப் போடவும் இந்தக்காற்றைப் பிடிக்கும் கலையைச் சித்தர்கள் போற்றி அருளினா.; இது வெறும் மூச்சுப்பயிற்சியே ஒழிய வாசி ஆகாது. இதனையும் கணக்கறிந்தே பழக வேண்டும் அவ்வாறு இல்லையேல் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். வாசி என்பது உடலை வறுத்திச் செய்யும் ஒரு யோகம் ஆகும். வாசி இலயமானதும் நாம் தவநிலையில் அதனை ஓடவிடவேண்டும் ஏனெனில் வாசியை நம் கட்டுக்குள் வைக்க தவமே சிறந்த வழி அசைவற்ற நிலையில் இருந்து வாசியை மனதால் பார்க்க வேண்டும். நெஞ்சிலே இருத்தி நெருங்கி ஒடும் வாயுவை என்கிறா் சிவவாக்கியா் ஸ்ரீகோரக்கநாதா் சந்திர ரேகை என்னும் நூலில் ஒரு யோகி அசைவற்று நெஞ்சு நிமிர்ந்து ஆசனத்தில் அமா்ந்து வாசியை நோக்கவேண்டும் என்கிறார். ஆகவே வாசியை மௌனம் என்ற வித்தையில் சோ்த்தால்தான் அது அட்டமாசித்திகளைப் பெற்றுத் தரும். வாசியை இலயமாக்கும் விதமும் அதனைத் தக்க வைத்துப் பயன்பெறும் விதமும் இதுவே ஆகும். இது வால்மீகா் ஞானம் என்ற நூலில் ஸ்ரீவால்மீகா் சொன்ன தவமுறையாகும். இம்முறையன்றி வேறு எவ்வழியிலும் வாசியைப் பெற முடியாது இதுவே சித்தர் வழி. வாசி எனும் உயிர்க்காற்றைப் பிடித்துச் சித்தர் பெருமக்கள் இறவாநிலை எய்தினார். ஆகவேதான் அனைவரும் ஒன்றுபோலவே இதனைத் தம்நூலில் பதிவுசெய்தனா்.
- *சித்தர்களின் குரல் shiva shangar*

Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

Comments