Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare



#மல்லையில்_சயனித்த_மாதவன் (மாசி மகம் சிறப்பு பதிவு)

-
🍀அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களிலும்; மாசிமகம் போன்ற புண்ணிய தினங்களிலும் புனித நீராடுவது சிறந்த பலன்களை அளிக்கும். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) புண்ணிய நதிகள், திருத்தலங்களில் அமைந்துள்ள திருக்குளங்கள், தடாகங்கள் மற்றும் கடற்கரைகள் ஆகியவை இதிலடங்கும். குறிப்பாக கடல் நீராடல் மிகவும் விசேஷமானது.🍀
-
🍀மாசிமகத் திருநாளில், கடற்கரைக்கு அருகிலுள்ள திருத்தல எம்பெருமாள் அங்கு எழுந்தருளி நீராடுவதை தீர்த்தவாரி என்பார்கள். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) பெருமாள் கடல் நீரைப் புனிதப்படுத்தும் அந்த சமயத்தில் பக்தர்களின் கடல் நீராட்டம் பெரும் புண்ணியத்தைத் தருவது.🍀 
-
🍀பொதுவாக பிரம்மோற்சவ நிறைவு நாளில், அந்தந்த திருக்கோவில்களுக்குரிய திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கும். மாசி மக நன்னாளில் பெருமான் அருகிலுள்ள கடலுக்குச் சென்று தீர்த்தவாரி கண்டருள்வார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) அதுபோன்ற நன்னாளில் திருக்கடல்மல்லை என்னும் மகாபலிபுரத்தில், அருள்மிகு தலசயனத்துறைவார் மற்றும் ஞானப்பிரான் மாசிமகத்தன்று தீர்த்தவாரி கண்டருள்கிறார்கள். தவிரவும் படவேடு யோக ராமர் ஆலய உற்சவரும் கடல் மல்லையில் தான் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.🍀
-
🍀"#செழுநீர்_மலர்க் கமலம் திரை உந்த வன் பகட்டால்
உழுநீர் வயல் உழவர் உழ பின் முன் பிழைத்து எழுந்த
கழுநீர் கடி கமழும் கடல் மல்லைத் தல சயனம்
தொழுநீர் மனத்து அவரைத் தொழுவாய் என் #தூய்_நெஞ்சே."🍀
-
🍀புண்டரீகர் என்ற முனிவர், பாற்கடலில் துயிலும் பரமனுக்கு தாமரை மலர்களைக் கொண்டு வழிபாடு செய்யவெண்ணி மகாபலிபுரம் கடற்கரைக்கு வந்தார். சமுத்திரம் வழியடைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) பக்தி மேலீட்டால் கடல் நீரை இறைத்துவிட்டு உள்ளே சென்று பரமனை வழிபடலாம் என்றெண்ணி, தன் இரு கரங்களால் கடல் நீரை இறைக்கத் தொடங்கினார். கைகளால் கடல் நீரை வற்றச்செய்ய முடியுமா? ஆனால் துணிந்து அச்செயலில் ஈடுபட்ட முனிவரின் பக்திக்கு மகிழ்ந்த திருமால், முதியவர் உருவம் கொண்டு புண்டரீக முனிவரிடம் வந்தார்.🍀
-
🍀"முனிவரே, எனக்கு மிகவும் பசியாக உள்ளது. உண்பதற்கு ஏதாவது உணவு கொடுங்கள்'' என்று கேட்டார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) அதற்கு புண்டரீகர், "பெரியவரே, பெருமாளைக் கண்டு வழிபட நான் கடல் நீரை இறைத்துக்கொண்டிருக்கிறேன். தங்களுக்கு உணவு கொண்டுவரச் சென்றால் இப்பணி தடைப்பட்டுவிடுமே... நான் என்ன செய்வது?'' என்று கேட்டார்.🍀
-
🍀அதற்கு முதியவர், "கவலை வேண்டாம். நீர் வரும் வரை கடல் நீர் இறைக்கும் பணியை நான் தொடர்கிறேன்'' என்று சொல்ல, அதற்கிணங்கிய முனிவர் உணவு கொண்டுவரச் சென்றார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) அவரை மேலும் சோதிக்க விரும்பாத திருமால், தன் வயோதிக வடிவை மாற்றிக்கொண்டு தரையிலேயே சயன கோலம் கொண்டார். முனிவர் வைத்திருந்த மலர்களையும் தன் பாதக்கமலங்களில் வைத்துக்கொண்டார்.🍀
-
🍀உணவுடன் திரும்பி வந்த முனிவர், பெருமாளின் சயனக்கோலம் கண்டு பேருவகை கொண்டார். பரந்தாமனின் பாதங்களைப் பணிந்து திருவருள் பெற்றார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) தரையில் சயனக்கோலம் கொண்ட பெருமாளுக்கு அன்று முதல் ஸ்தல (தரை) சயனப்பெருமாள் என்றே பெயர் அமைந்துவிட்டது. இத்தல நாயகிக்கும் நிலமங்கை என்றே பெயர்.🍀 
-
🍀இத்தலம் "அர்த்தஸேது" என்ற பெருமையும் கொண்டதாகும். மேலும் இங்கு தான் முதலாழ்வார்களில் இரண்டாமவரான பூதத்தாழ்வார் நீலோத்பல மலரில் தோன்றினார். (திருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்) இத்தலத்து நாயகனை போற்றி திருமங்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பாடல்களை அருளிச் செய்துள்ளார்கள். மேலும் வராகக்ஷேத்ரம் என்ற பழம்பெருமைக்குக் காரணமான ஆதிவராகப் பெருமாளும் தனது வலது மடியில் திருமகளுடன் காட்சி தந்தருள்புரிகிறார்.🍀 
-
🍀இத்தலத்தில் கடல் நீராடி பெருமாளையும் பிராட்டியையும் தரிசிப்பவர்களுக்கு திருமண பாக்கியம், நன்மக்கட்பேறு போன்ற பலன்கள் கிட்டும். மாசி மகத்தன்று இத்தல வைபவங்களில் கலந்துகொள்பவர்களுக்கு எல்லா நாளும் நன்னாளே!🍀
-
#நன்றி : எம்.என்.ஸ்ரீனிவாசன்
-
#தொகுப்பு : #நன்றியுடன் உங்கள் ஸ்ரீ தில்லை #இளந்தென்றல்
-
|| ----- 🍀ஓம் நமோ நாராயணா🍀 ----- ||



Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

Comments