Courtesy A Facebook Friend
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
!! பக்தனுக்காக சிவபெருமானான ஸ்ரீவிட்டல பாண்டுரங்க கிருஷ்ணன்!!
அரைஞாண் காணிக்கை அற்புதம்..
பண்டரிபுரத்தில் நரஹரி என்ற பொற்கொ ல்லர் இருந்தார். தீவிரமான சிவபக்தர். அவருக்கு விட்டல நாமாவளியைக் கேட்கக் கூடப் பிடிக்காது, கேட்டால் காதுகளைப் பொத்திக் கொள்வார். பாண்டுரங்க கோவில் இருக்கும் தெருவின் வழியே கூடப் போகமாட்டார்
.
ஒரு சமயம், பாண்டுரங்கனின் பக்தனான வணிகர் ஒருவர், தனக்குக் குழந்தை பிறந்தால் பாண்டுரங்கனுக்கு நவரத்தினங்கள் இழைத்த அரைஞாணைக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக்கொண்டார்.
ஒரு சமயம், பாண்டுரங்கனின் பக்தனான வணிகர் ஒருவர், தனக்குக் குழந்தை பிறந்தால் பாண்டுரங்கனுக்கு நவரத்தினங்கள் இழைத்த அரைஞாணைக் காணிக்கையாகச் செலுத்துவதாக வேண்டிக்கொண்டார்.
ப்ரார்த்தனையும் பலித்தது. வேண்டிக்கொண்டபடியே அரைஞாண் செய்ய முடிவு செய்து, பொற்கொல்லரான நரஹரியைத் தேடி வந்தார்.
நரஹரி தம்மால் சிவனைத் தவிர பிற தெய்வங்களுக்குச் செய்ய முடியாது என்று சொல்ல, வணிகரோ, வேறு பொற்கொல்லர் இந்த ஊரில் இல்லை என்பதால் உம்மிடம் வந்தேன், தயவு பண்ணி செய்து கொடுங்கள் என்று கூறினார்.
நரஹரி, விக்ரஹத்தின் அளவு தந்தால் செய்து தருகிறேன் என்று சொல்ல, வணிகர் கோவிலுக்குச் சென்று, அளவை வாங்கிக் கொண்டு வந்து நரஹரியிடம் கொடுத்தார்.
நரஹரியும் மிக நேர்த்தியாக அரைஞாண் செய்து தர, மகிழ்ந்த வணிகர், அதைப் பெற்றுக் கொண்டு கோவிலில் கொடுத்தார்.
அதை விட்டலனுக்கு அணிவித்தபோது, சில விரற்கடைகள் குறைவாக இருந்தது. மீண்டும் நரஹரியிடம் சென்று அரைஞாணைக் கொடுத்து, சரிசெய்து தரச்சொல்ல, அவரும் சரி செய்து கொடுத்தார்.
இரண்டாம் முறை செய்து கொடுத்தது, விக்ரஹத்திற்குப் பெரிதாக இருந்தது. வணிகர் வருத்தத்துடன் நரஹரியிடம் சென்று, அவரையே கோவிலுக்கு வந்து விக்ரஹத்தை அளந்து கொள்ளுமாறு சொல்ல, நரஹரி ஒப்புக் கொள்ளவில்லை.
வணிகர் கெஞ்சினார். கடைசியில், கண்ணைக் கட்டிக் கொண்டுதான் கோவிலுக்கு வருவேன் என்ற நிபந்தனையுடன் கோவிலுக்குச் சென்று அளவெடுக்க சம்மதித்தார்.
அவரது விஷ்ணு த்வேஷத்தைக் கண்ட வணிகர் வியந்து, நரஹரியின் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று, பாண்டுரங்கனின் விக்ரஹத்தின் முன்னால் நிறுத்தினார்.
கண்களைக் கட்டிக் கொண்டிருந்த நரஹரி, அளவேடுக்கவேண்டி பாண்டுரங்கனின் இடுப்பைத் தடவ, அவர் கைகளுக்குப் புலித்தோலைத் தடவுவதுபோல் பட்டத
. உடனே அவர், மற்ற அங்கங்களைத் தடவ, திரிசூலம், உடுக்கை, சடாமுடி, ருத்திராக்ஷம் என்று கைகளில் தட்டுப்பட்டது
அவர், சிவபெருமான் என்று நினைத்து,கண்கட்டை அவிழ்த்து, கண் திறந்து பார்த்தால், எதிரே சங்கு, சக்ரங்களுடன், பீதாம்பரதாரியாகப் பண்டரிநாதன் நின்றார். அதிர்ந்து, மீண்டும் கண்களைக் கட்டிக் கொண்டார். தடவிப் பார்த்தால், முன்போலவே சிவபெருமானுக்கு உரிய அனைத்தும் கைகளில் தட்டுப்பட்டது.
இப்போது நரஹரியின் அகக்கண் திறந்தது. ஹரனும் ஹரியும் ஒன்றே என்று உணர்ந்த அவர் விட்டலனை வணங்கித் தொழுது அழுதார். தனது அறியாமையை மன்னிக்க வேண்டினார். இப்போது அரைஞாணும் கனகச்சிதமாய்ப் பொருந்தியது.
எதிரே பாண்டுரங்கன் சிரித்தவாறு சேவை சாதிப்பதைக் கண்ட அவர், விட்டலனை நமஸ்கரித்தார். அதுமுதல் நரஹரி பாண்டுரங்க பக்தராகவும் விளங்கினார்.
!! ஜெய் ஸ்ரீ ருக்மிணி பாண்டுரங்கா !!
கடந்த,
520 ஆண்டுகளுக்கு முன், வேம்பத்தூரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அம்பிகையின் மந்திரத்தை லட்சம் முறை உருவேற்றியதால், அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து, அருள்பாலித்தாள். இதனால், கவிஞராக மாறிய இவரை, கவிராஜ பண்டிதர் என்றே அழைத்தனர்.
மனைவியை இழந்த கவிராஜர், ஒரு சமயம், தன் மகள் மீனாட்சியை, தங்கையின் பொறுப்பில் விட்டு, காசிக்கு புறப்பட்டார். வழியில் ஓய்வெடுப்பதற்காக மரத்தடியில் தங்கினார். அப்போது, அவர் மகள், மீனாட்சி, கையில் சில பாத்திரங்களுடன் அங்கு நின்றிருந்தாள். அதிர்ந்த கவிராஜர், 'நீ ஏன் என் பின்னால் வந்தாய்... காசி என்ன பக்கத்திலா இருக்கு... போயிட்டு உடனே திரும்ப... எப்படியும் ஆறு மாசம் ஆகுமே...' என்றார்.
மகளோ, 'உங்களை விட்டு நான் மட்டும் தனியா இருக்க மனசு கேக்கல. நானும் கூட வந்து, உங்களுக்கு உதவியா இருக்கேன்...' என்றாள் அழுத்தமாய்! வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் கவிராஜர். போகும் வழியெல்லாம், தந்தைக்கு உணவு சமைத்து கொடுத்து, உதவியாக இருந்தாள் மீனாட்சி.
இருவரும் காசியை சென்றடைந்தனர். கங்கையில் நீராடுவதும், விஸ்வநாதர் - விசாலாட்சி தரிசனமுமாக நாட்கள் போயின. ஒருநாள், இருவரும் கடை வீதி வழியாக சென்ற போது, தனக்கு வளையல் வாங்கிக் கொடுக்கக் கூறினாள் மீனாட்சி.
கவிராஜர் வருந்தினார்; கையில் காசில்லை. என்ன செய்வது என திகைத்த போது, அங்கே தமிழ் பேசும் ஒருவர் வந்து, சிறுமி மீனாட்சிக்கு வளையல் வாங்கிக் கொடுத்து மறைந்தார். அவரை, சிவன், விஷ்ணு அல்லது பிரம்மாவாக இருக்கலாம் என்கிறது, 'புலவர் புராணம்' எனும் நூல்.
இருவரும், காசி தரிசனத்தை முடித்து, ஊருக்கு திரும்பினர். வழியில், முதலில் தங்கிய மரத்தடியை அடைந்த போது, ஓய்வெடுப்பதற்காக அமர்ந்தார் கவிராஜர். அப்போது, 'அப்பா... நீங்க மெல்ல வாங்க... நான் முன்னாடி போறேன்...' என்று சொல்லி, சிட்டாகப் பறந்தாள் மீனாட்சி.
கவிராஜர் பார்வையில் இருந்து மறைந்ததும், அக்குழந்தை பழுத்த சுமங்கலியாக மாறியது. ஆம்... மகள் வடிவில் வந்தது அம்பிகை. அந்த சுமங்கலி பெண், நேரே கவிராஜரின் தங்கை வீட்டை அடைந்து, 'அம்மா... உங்க அண்ணன் இந்த வளையலை உங்ககிட்ட தரச் சொன்னாரு...' என்று கூறி, வளையல்களை கவிராஜரின் தங்கையிடம் தந்து, மறைந்தாள்.
சற்று நேரத்தில் கவிராஜர் வந்ததும், அவரது தங்கை, 'நீ போனதுல இருந்து உன் பொண்ணு படுத்த படுக்கையாயிட்டா...' என்றாள். இதைக் கேட்டதும் அதிர்ந்த கவிராஜர், 'என்ன சொல்ற... மீனாட்சி என் கூட காசிக்கு வந்து, அப்பப்ப சமைச்சு போட்டா... வளையல் கூட வாங்கினாளே...' என்று திகைப்போடு விவரித்தார். தங்கையோ, 'என்னண்ணா சொல்றே... மீனாட்சி இங்க தானே இருக்கா... கொஞ்ச நேரம் முன் ஒரு சுமங்கலி பெண் வந்து, நீ குடுத்ததா சொல்லி, இந்த வளையல்களை தந்துட்டு போனாளே...' என்று விவரித்தார்.
உண்மை புரிந்த கவிராஜருக்கு, மெய் சிலிர்த்தது. கண்களில் கண்ணீர் வழிய, அம்பிகையை வணங்கினார்.இவர் தான், ஆதிசங்கரரின், சவுந்தர்யலஹரி பாடல்களை, தமிழில் மொழி பெயர்த்தவர். தற்போது பிரபலமாகி வரும், 'வராஹி மாலை' எனும் மந்திர துதி நூலை, அருளியவர்.
பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது. அம்பிகை நமக்கும் நல் உணர்வை ஊட்ட வேண்டுமென்று வேண்டுவோம்; அவள் நிச்சயம் ஊட்டுவாள்!
பேய், பிசாசு, பில்லி மற்றும் சூன்யம் முதலான கொடுமைகளில் இருந்து, விடுதலை அளிக்கும் அருள் நூலிது. அம்பிகை நமக்கும் நல் உணர்வை ஊட்ட வேண்டுமென்று வேண்டுவோம்; அவள் நிச்சயம் ஊட்டுவாள்!
திருவாசகம்!
மாடும் சுற்றமும் மற்றுள போகமும்
மங்கையர் தம்மோடும்
கூடி அங்குள்ள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடு தந்து என்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல் காட்டி
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டதோர்
அற்புதம் அறியேனே!
மங்கையர் தம்மோடும்
கூடி அங்குள்ள குணங்களால் ஏறுண்டு
குலாவியே திரிவேனை
வீடு தந்து என்றன் வெந்தொழில் வீட்டிட
மென்மலர்க் கழல் காட்டி
ஆடுவித்து எனது அகம் புகுந்து ஆண்டதோர்
அற்புதம் அறியேனே!
விளக்கம்: செல்வம், உறவு மற்றும் போகங்களுடன், மாதர்களோடும் கலந்து, ஆங்காங்கே உள்ள குணங்களால் தாக்கப்பட்டு, அவைகளையே கொண்டாடி திரிபவனாக இருந்தேன். அப்படிப்பட்ட என்னையும், என் கொடுந்தொழில்கள் நீங்கும்படியாக, மென்மையான மலர் போன்ற திருவடிகளை காட்டி, அடியேனை ஆட்கொண்டருளி, என் உள்ளத்தில் புகுந்து ஆட்கொண்டு, முக்தியையும் அருளினார், சிவபெருமான். அந்த அதிசயம் இப்படிப்பட்டதென்று, அடியேனுக்கு தெரியவில்லையே!
ஶ்ரீபராசக்தி மஹிமை:
"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே" மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.
தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!
"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.
"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.
"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!
"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!! " சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.
மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும் அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.
ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.
"உம் கைக்கு தங்க மோதரம் போடனும் ஒய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.
குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.
"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.
மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!
அசரீரி கேட்டது
"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ
"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும்!!" சட்டென நின்றது அசரீரீ
நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.
"அம்மா!! மீனாக்ஷி!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.
"தாயே!! மீனாக்ஷி!! தாயே!! மீனாக்ஷி!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!
ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!
"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.
ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே
ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்நீர்
நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்
பாதநிழல் யான் தங்கப்பண்"
ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்நீர்
நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்
பாதநிழல் யான் தங்கப்பண்"
ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.
காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.
படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.
"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!
சிந்திப்போம் காமாக்ஷியின் வைபவத்தைத் தொடர்ந்து!!
ஶ்ரீமாத்ரே நம:
வக்த்ரலக்ஷ்மீ பரிவாஹ சலன்மீனாப லோசனாயை நம:
காமாக்ஷ்யை நம:
லலிதாம்பிகாயை நம:
வக்த்ரலக்ஷ்மீ பரிவாஹ சலன்மீனாப லோசனாயை நம:
காமாக்ஷ்யை நம:
லலிதாம்பிகாயை நம:
-- ஶ்ரீராமராகவன்
ஓம் ஸ்ரீ மஹா காமாக்யா சக்தி பீடங்கள் பற்றிய புராணத் தகவல்
தந்தையாகியதட்சனால்அவமதிக்கப்பட்டதாட்சாயிணி (சதி தேவி) அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்டவீரபத்திரர்அந்தயாகத்தை அழித்தார். மனைவி இறந்தவருத்தத்தில்,சிவன்தன் மனைவிதாட்சாயிணியின்இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்தவிஷ்ணுதன் சக்ராயுதத்தால்தாட்சாயிணியின்உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகுசிவன்சாந்தமானார். சிதறியதாட்சாயிணியின்உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின.
சதிதேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மஹாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வம் கூறுகிறது. மகாபாரதத்தின் விராட பர்வம் (6) மற்றும் பீஷ்ம பர்வம் (23) ஆகியவற்றில் காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும்தந்திர சூடாமணிபோன்ற பல தந்திரநூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும்காளிகா புராணம்கூறும் மிக முக்கியமான நான்குஆதி சக்தி பீடங்களில்இதுவும் ஒன்றாகும்.இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின்தேவி பாகவத புராணத்திலும்உள்ளது.அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம்தேவிக்கு 18மகா சக்தி பீடங்கள்உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது.
மன்மதனை(காமன்) சிவபெருமான் எரித்த இடமாதலாலும், காமன் தனதுசுயரூபம் பெற்ற பிறகு விஸ்வகர்மாவைக் கொண்டு கட்டிய கோயில் என்பதாலும் இந்த இடம்"காமரூப்' என அழைக்கப்படுகிறது. தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதிதேவி நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலை சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் உலகெங்கும் இருள் சூழ்ந்து அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சதிதேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு 51 சக்தி பீடங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில், சக்தி வழிபாட்டு முறையில்தான் அதிக அளவில் மந்திர தந்திரங்கள் கையாளப் படுகின்றன. அவ்வகை வழிபாட்டுக் கென்று சிறப்பான ஆலயங்களும் உள்ளன. அவற்றில் தலையாயது காமாக்யா தேவி கோவில்.
அஸ்ஸாம்தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம்பின்பற்றப்படுகிறது. இதுதாட்சாயிணியின்(சதி தேவி)யோனிவிழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது...
இக்கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோவில் போல தோன்றும். உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். இங்கு சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் யோனி பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர்.
இக்கோவிலில்காளி,தாரா,லலிதா திரிபுரசுந்தரி,புவனேஸ்வரி,பைரவி,சின்னமஸ்தா,தூமாவதி,பகளாமுகி,மாதங்கி மற்றும் கமலா ஆகிய தச மஹா வித்யாக்கள்எனப்படும் பத்து தேவியருக்கும்சன்னதிகள் உண்டு.
காமாக்யா கோவில் திருவிழாக்கள்
1.அம்புபச்சி மேளா
2.துர்க்கா பூஜா
3.மானஷா பூஜா
1.அம்புபச்சி மேளா
2.துர்க்கா பூஜா
3.மானஷா பூஜா
உமாநந்தர் கோவில்
இக்கோவில் காமாக்யா பீடத்திற்கான பைரவரின் கோவிலாகும்
இக்கோவில் காமாக்யா பீடத்திற்கான பைரவரின் கோவிலாகும்
பிரம்மபுத்ரா ஆற்றில் அமைந்திருக்கும் பீகாக் ஐலேண்ட் தீவுப்பகுதியில் உமானந்தா கோயில் வீற்றிருக்கிறது. ஆஹோம் வம்ச மன்னரான கடாதர் சின்ஹா’வின் ஆட்சிக்காலத்தில் பர் புகான் கர்கன்யா ஹந்திக் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.ஃபெர்ரி படகுகள் மற்றும் மோட்டா படகுகள் மூலமாக மட்டுமே இந்த கோயிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தில் சுயம்புவாக அமைந்த யோனிவடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அதன் அருகிலிருந்து இயற்கையாக ஊறிவரும் நீரே பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோர், வசதிகள் பல இருந்தும் நிம்மதியற்றுத் தவிப்போர், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்ற பல பிரச்சனைகளில் சிக்கித் தவிப்போர் இங்கு வந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர். வசந்த காலத்தின்போது- ஆண்டுக்கு மூன்று நாட்கள் இவ்வாலயம் மூடப்படுகிறது. காரணம். அந்த நாட்கள் தேவி விலக்காகி இருக்கும் நாட்களாம். இந்த நாட்களில் தேவி பீடத்திலிருந்து இயற்கையாக வரும் நீருற்று செந்நிறத்தில் வருவது அதிசயம்! இந்த மூன்று நாட்களில் பக்தர்களுக்கு ஆலயம்செல்ல அனுமதி இல்லையென்றாலும், ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் யோகிகள் ஒன்றுகூடி வழிபாடு செய்கிறார்கள். இதனால் அவர்களின் சக்தி அதிகரிக்கிறதாம்.
உலகம் அண்டமது தாயின் யோனியப்பா..........
ஆவுடையில் விளையாடியது தந்தையின் லிங்கம்யப்பா......
தாயின் யோனியில் உறவாடியது தந்தையின் விந்துப்பா........
தந்தை விந்துவிலே உன் உயிர் ஊசாலடுயப்பா......
உன் உயிர் சக்தி கொள்ள தாயின் நாதம் கலந்ததுயப்பா....
விந்து ஓட நாதம் வழிகாட்ட கருவில் குடி கொண்டதுயப்பா....
உயிரும் உடலும் நாதம் கொண்ட நீ உருவானயப்பா...
நீ கருவுடன் இணைந்தால் நீ ஜீவன் ஆனாயப்பா.......
தந்தை தாயின் எண்ணம் உன்னை வளர்த்தப்பா.....
எண்ணம் ஒடுங்க மீண்டும் தந்தையின் முதல் படியப்பா.....
மனதால் நினைவு பெற விந்து நாதம் இணைந்ததுயப்பா......
ஒலி ஒளி உணர்ந்து வர பிறவி வாழ்கை அறியலாமப்பா.....
கரு பிடித்த நாதன் வளர்ந்தால் அவனே இறைவனப்பா........
நாதனை உணர்ந்தவன் ஞானபோக்கு அறிவானப்பா....
சத்குரு துணை இருந்தால் நீயே இறையம்சம் ஆவாய் அப்பனே...
ஆவுடையில் விளையாடியது தந்தையின் லிங்கம்யப்பா......
தாயின் யோனியில் உறவாடியது தந்தையின் விந்துப்பா........
தந்தை விந்துவிலே உன் உயிர் ஊசாலடுயப்பா......
உன் உயிர் சக்தி கொள்ள தாயின் நாதம் கலந்ததுயப்பா....
விந்து ஓட நாதம் வழிகாட்ட கருவில் குடி கொண்டதுயப்பா....
உயிரும் உடலும் நாதம் கொண்ட நீ உருவானயப்பா...
நீ கருவுடன் இணைந்தால் நீ ஜீவன் ஆனாயப்பா.......
தந்தை தாயின் எண்ணம் உன்னை வளர்த்தப்பா.....
எண்ணம் ஒடுங்க மீண்டும் தந்தையின் முதல் படியப்பா.....
மனதால் நினைவு பெற விந்து நாதம் இணைந்ததுயப்பா......
ஒலி ஒளி உணர்ந்து வர பிறவி வாழ்கை அறியலாமப்பா.....
கரு பிடித்த நாதன் வளர்ந்தால் அவனே இறைவனப்பா........
நாதனை உணர்ந்தவன் ஞானபோக்கு அறிவானப்பா....
சத்குரு துணை இருந்தால் நீயே இறையம்சம் ஆவாய் அப்பனே...
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Courtesy A Facebook Friend
Comments
Post a Comment