Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare


#ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன்_விருத்தம்
-
#பாடல்_எண் : 04
#பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்தும் வளர்ந்தும் நான்
பேரான ஸ்தலமும் அறியேன்🌹 
.
#பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான்
போற்றிக் கொண்டாடி அறியேன்🌹
.
#வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி
வாயினாற் பாடி அறியேன்🌹
.
#மாதா பிதாவினது பாதத்தை
வணங்கி ஒருநாளுமே அறியேன்🌹
.
#சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்தும் அறியேன்🌹
.
#சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்டன் அறியேன்🌹
.
#ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்
ஆச்சி நீ கண்டதுண்டோ?🌹
.
#அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே.🌹
-
கச்சி மாநகர் காமாக்ஷி #ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன் திருவடிக்கே சமர்ப்பனம்.....
-
#அம்மனின்_அழகு_வர்ணனை_தொடரும்...
-
#தொகுப்பு: நன்றியுடன் ஸ்ரீ தில்லை #இளந்தென்றல்
-
www.facebook.com/Thillai.Elanthendral


Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare

Comments