கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். பெருமை மிக்க அருட்கூடமாய் திகழும் இத்தலமானது சித்தர் பூமி என்கிற நம்பிக்கை நிறைவாய் இருக்கிறது. பாம்பாட்டிச் சித்தரின் குருவாகிய அகப்பேய் சித்தர் இங்கு ஜீவ சமாதி கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போன்று கோரக்கர் ஜீவ சமாதி கொண்ட 12 தலங்களில் இதுவும் ஒன்றென சொல்கிறார்கள்.
>> பெரும்பாலும் சித்தர் சமாதிகளில் சிவலிங்கம் தான் இருக்கும். சிலவிடங்களில் விநாயகர் இருப்பார் , சீர்காழி சட்டைநாதர் சமாதி , விருத்தாசலம் பாம்பாட்டி சித்தர் மற்றும் நாகப்பட்டினம் அழுகன்னி சித்தர் சமாதிகளில் பலிபீடம் தான் இருக்கிறது . இங்கும் அருகருகேயுள்ள இரண்டு மூல ஸ்தானத்தில் ஒன்றில் விநாயகரும் மற்றொன்றில் பலிபீடமும் அமைந்துள்ளது . மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் அருள்பாலிக்க கூடிய இவ்விடமே அகப்பேய் சித்தரின் சமாதியாகும் .
>> மணிமுத்தாற்றை தீர்த்தமாகவும், கொளஞ்சி மரத்தை தல விருட்சமாகவும் கொண்ட இத்தலத்தில் சித்தர்களின் அருளும், சிவனின் சாந்நித்யமும், குமரக் கடவுளின் நீதி பரிபாலனமும் நிறைந்திருக்கிறது.
தற்போது இங்கு சித்தர்கள் மண்டபம் ஒன்று அமைத்துள்ளார்கள் அருமையாக உள்ளது ,, கோவில் பின்புறம் மான்கள் இருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும் .. இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவாரஸ்யமானது.
தற்போது இங்கு சித்தர்கள் மண்டபம் ஒன்று அமைத்துள்ளார்கள் அருமையாக உள்ளது ,, கோவில் பின்புறம் மான்கள் இருப்பது பார்க்க கண்கொள்ளா காட்சியாகும் .. இவர் இங்கு கோயில் கொண்ட கதையும் சுவாரஸ்யமானது.
>> இத்தலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் நான்கைந்து பேர்கள் சேர்ந்து கொண்டு மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டியபடி அந்த பக்கம் செல்வார்கள். காலை சுமார் பத்து மணிக்கு செல்லும் அவர்கள் அந்தி சாய்வதற்குள் வீடு திரும்பி விடுவார்கள். அந்த அளவுக்கு மனித நடமாட்டம் குறைந்த காட்டுப்பகுதியாக விளங்கியது.
>> எல்லா மாடுகளும் பால் தருகிறது . ஆனால் ஒரு வெள்ளைப் பசு மட்டும் நான்கைந்து நாட்களாக சொட்டு பால் கூட தர மாட்டேங்குதே என்று கவலையுடன் இருந்த பண்ணையார் ஒரு நாள் அப்பசுவை கண்காணித்தார்.ஒருநாள் தோட்டத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும் போது அந்த வெள்ளைப் பசு மட்டும் தனியாக ஒரு புதருக்குள் சென்றதை கவனித்த பண்ணையார் அதை பின் தொடர்ந்து சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி கண்டு அதிர்ந்து நின்றார்.
>> புதரின் அருகே சென்றதும், பசு சுற்றும் முற்றும் பார்த்து, தனது கண்களை மூடி நின்றது. அதன் காம்பிலிருந்து தானாக பால் பொழிந்து கொண்டிருந்தது. பசுவின் அருகில் சென்ற பண்ணையார் ஆதூரமாய் அதைத் தொட்டார். கண் திறந்த பசு, தன் பணி முடிவடைந்த நிலையில் அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தது. பால் பொழிந்த இடம் ஒரு கல் பீடமாக இருக்க கண்டார்.ஊராரிடம் நடந்ததை சொல்லி கூட்டி வந்து காட்டினார். இவர் குமரக்கடவுள் என்று உணர்ந்த மக்கள் கொளஞ்சி மரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே தோன்றியதால் கொளஞ்சியப்பர் என்று திருநாமம் சூட்டி வழிபட்டார்கள்.
>> சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் கோயிலின் அழகிய ராஜகோபுரம் காண்பவர் கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது உள்ளே சென்றவுடன் பலிபீடம், கொடிமரம், மயில் ஆகியவற்றைக் கடந்து துவாரபாலகர்களின் அனுமதியோடு உள்ளே செல்லும் நாம் கருவறைகளைக் காண்கிறோம். ஒன்றில் சித்தி விநாயகர். அண்ணனின் அருகே அருவமாய், சுயம்புவாய் தோன்றிய கொளஞ்சியப்பர் வீற்றிருக்கிறார். விநாயகருக்கும், கொளஞ்சியப்பருக்கும் தனித்தனி விமானங்கள் உள்ளன. சுமார் மூன்றடி உயரம் கொண்ட பலி பீட வடிவம் கொண்ட கொளஞ்சியப்பரின் பீடத்தில் ஷடாட்சரம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது.
>> இத்தலத்தில் 'பிராது கட்டுதல்' என்ற ஒரு வழிபாடு இருக்கிறது. கோயிலின் பிரகாரத்தில் அதற்காக முனீஸ்வரன் சந்நிதி அருகே இடமும் உள்ளது.பிராது கட்டுவது என்ன என்றால் கோயில் அலுவலகத்தில் மனு எழுதி, அங்கு கொடுக்கப்படும் காகிதத்தில் மணவாளநல்லூர் அருள் மிகு கொளஞ்சியப்பர் அவர்களுக்கு.... நான் இந்த ஊரிலிருந்து வருகிறேன். இன்னாருடைய மகன். என் பெயர் இது.. என்பன போன்ற விவரங்களை எழுதி தனது குறை, கோரிக்கை என்ன என்பதையும் குறிப்பிட்டு கொளஞ்சியப்பர் சந்நிதியில் உள்ள சிவாச்சாரியாரிடம் தர வேண்டும். அதை அவர் கொளஞ்சியப்பரின் பாதத்தில் சமர்ப்பித்து, அர்ச்சனை செய்து, மனுவை விபூதி சேர்த்து, பொட்டலமாக்கி ஒரு நூலால் கட்டித் தருவார். அதை முனியப்பர் சந்நிதியில் நிறுத்தப்பட்டுள்ள வேலில் கட்ட வேண்டும். பிராது கட்டியவர்களின் கோரிக்கை, பிராது கொடுத்த 90 நாட்களுக்குள் ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாறு பிராது கட்டி வழிபடுவதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இக்கோயிலில் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேப்பெண்ணெய் மருந்து தரும் வழக்கமும் இருக்கிறது
திருத்தல வரலாறு :
விருதாச்சலத்திற்கு வருகை தந்த சுந்தரர் சிவஅடியார்களுடன் சிவாலய தரிசனம் செய்து அந்ததந்த தல நாதனையும், தேவியையும் தமிழ் மணக்க, உள்ளம் உருகச் செய்யும் பாடல்களால் ஆராதித்த இவர் பழமலையை அடைந்தார்.
சுந்தரர் இது என்ன ஊர்? என்று தொண்டர் ஒருவரிடம் கேட்டார். இவ்வூர் பெயர் பழமலை என்னும் விருதாச்சலம். பரமனின் திருநாமம் பழமலைநாதர், அம்பிகை விருத்தாம்பிகை என்று பதில் கூறிய தொண்டரிடம் ஊரும் பழமலை, அம்பாளும் கிழவி, அரனோ தொண்டுக்கிழம் இவர்களை போற்றிப் பாடி ஆகப்போவது ஒன்றுமில்லை நடையை கட்டுவோம் என்று அலட்சியமாக கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தார் சுந்தரர்.
பிரபஞ்சத்திற்கே ஆதாரமான சிவபெருமான் மெல்ல சிரித்தார். அன்னையோ அடுத்து நடக்க போவதை அறிந்து கொள்ளும் ஆவலோடு ஈசனின் முகம் பார்த்து நின்றாள்.
பழமலைநாதர் தனது ஞானக்குழந்தையான முருகனிடம் சுந்தரருக்கு பாடம் புகட்டும்படி அருளாணை இட்டார்.
வேடனாய் வடிவெடுத்த வேலவன் சுந்தரர் கூட்டத்தை சுற்றி வளைத்தார். நாணேற்றி அம்பின் முனையில் நிறுத்தினார். அஞ்சி நின்ற சுந்தரர் வசமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்துக்கொண்டார் முருகன். அவற்றைத் திரும்பத் தரும்படி கெஞ்சினார் சுந்தரர்.
வேலவன் பழமலை வந்து பெற்றுக்கொள் என்று கம்பீரமாய் கட்டளை இட்ட போதுதான், தான் ஈசனை மதிக்காமல் வந்தது தவறு என்பதை உணர்ந்த சுந்தரர் உடனே பழமலை சென்று ஈசனை பாடி துதித்தார். உடனே இறையருள் பெற்றார். ஈசனின் ஆணைப்படி பழமலை பதியின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமாய் அமர்ந்தார் வேலவன்.
அமைவிடம் :
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது மணவாளநல்லூர் கொளஞ்சி யப்பர் திருக்கோயில். இத்தலத்திற்கு செல்ல விருத்தாசலத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் இருக்கின்றன. இங்கே இன்னொரு வசதி, மற்ற கோயில்களைப் போல மதிய வேளையில் நடை சாத்தப்படாததுதான். காலை 6 முதல் இரவு 8 மணி வரை நடை திறந்தே இருக்கும். தினமும் 14 மணிநேரம் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் குறை தீர்த்தருளுகிறார் கொளஞ்சியப்பர்.
Comments
Post a Comment