#ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன்_விருத்தம்
-
#பாடல்_எண் : 03
#கெதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்
குறைகளைச் சொல்லி நின்றும்🌹
.
#கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ
குழப்பமாய் இருப்பதேனோ🌹
.
#சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்
சதமாக நம்பினேனே🌹
.
#சற்றாகிலும் மனது வைத்து எனை ரக்ஷிக்க
சாதகம் உனக்கில்லையோ🌹
.
#மதி_போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய
மதகஜனை ஈன்ற தாயே🌹
.
#மாயனுடை தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற உமையே🌹
.
#அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்
அன்பு வைத்து எனை ஆள்வாய்🌹
.
#அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாக்ஷி உமையே...!!🌹
-
#குறிப்பு: இப்பாடலுக்கான #சொற்பிரிவு எனது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. #பிழை இருப்பின் எனக்கு தெரியப்படுத்தலாம்.
-
கச்சி மாநகர் காமாக்ஷி #ஸ்ரீ_காமாக்ஷி_அம்மன் திருவடிக்கே சமர்ப்பனம்.....
-
#அம்மனின்_அழகு_வர்ணனை_தொடரும்...
-
#தொகுப்பு: நன்றியுடன் ஸ்ரீ தில்லை #இளந்தென்றல்
-
www.facebook.com/Thillai.Elanthendral

Comments